Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 770

பொருட்பால்அங்கவியல்77. படைமாட்சி

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானைதலைமக்கள் இல்வழி இல்.

nilaimakkaL sAla uTaitteninum tAnaitalaimakkaL ilvazhi il

Soundarya Bala Nandakumar

பொருள் / உரை

முருகா எளிய உரை

போர்க்களத்தில் அஞ்சாமல் போரிடும் சிறந்த வீரர்கள் பலரை மிகுதியாகக் கொண்டிருந்தாலும், அவர்களுக்குத் தக்க வழிகாட்டும் சிறந்த படைத்தலைவர்கள் இல்லாவிட்டால், அந்தப் படை போரில் நிலைத்து நிற்க முடியாமல் போகும்.

• நிலைமக்கள் சால உடைத்தெனினும் = போரிடும் சிறந்த வீரர்கள் பலரை ஒரு படை பெற்றிருந்தாலும்,• தானை தலைமக்கள் இல்வழி இல் = வழிநடத்தும் தளபதிகள் இல்லாதபோது அப்படை போரில் நிலைத்து நிற்க முடியாது.

மு.வரதராசன்

நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.

பரிமேலழகர்

நிலை மக்கள் சால உடைத்து எனினும் - போரின்கண் நிலையுடைய வீரரை மிக உடைத்தே யாயினும்; தலைமக்கள் இல்வழித் தானை இல் - தனக்குத் தலைவராகிய வீரர் இல்லாதவழித் தானை நில்லாது. (படைத்தலைவர் நிலையுடையரன்றிப் போவாராயின், காண்போர் இல்லெனப் பொராது தானும் போம் என்பார், 'தலைமக்கள் இல் வழி இல்' என்றார். இவை மூன்று பாட்டானும் முறையே படைத்தகையின்மையானும் அரசன் கொடைத் தாழ்வுகளானும், தலைவர் இன்மையானும் தாழ்வு கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.

Meaning in English

Though men abound, all ready for the war, No army is where no fit leaders are

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout