அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை.
aRattiRkE anpusAr penpa aRiyArmaRattiRkum aஃtE tuNai
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• அறியார் = அறியாதவர்கள்• அறத்திற்கே = நற்செயல்களுக்கு மட்டுமே• அன்பு சார்பு என்ப = அன்பு துணையாக இருக்கும் என்று கூறுவர்;• மறத்திற்கும் = தீமையை அழிக்கும் வீரச் செயல்களுக்கும்• அஃதே துணை = அந்த அன்பே சிறந்த துணையாக நிற்கிறது.எளிய விளக்கம்:அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவர்கள்; ஆராய்ந்து பார்த்தால், அன்புக்குரியோரைக் காக்கவும் தீமையை அழிக்கவும் செய்யும் வீரச் செயல்களுக்கும் அந்த அன்பே பெரும் பலமாகத் திகழ்கிறது.
மு.வரதராசன்
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது
பரிமேலழகர்
அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் - அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார்; மறத்திற்கும் அஃதே துணை - ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது. (ஒருவன் செய்த பகைமைபற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன் மேல் அன்புசெய்ய அது நீங்குமாகலின்,மறத்தை நீக்குதற்கும் துணையாம் என்பார், 'மறத்திற்கும் அஃதே துணை' என்றார். துன்பத்திற்கு யாரே துணையாவார் (குறள் 1299)என்புழிப்போல. இவை ஐந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.
Meaning in English
The unwise deem love virtue only can sustain, It also helps the man who evil would restrain





