முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்பற்றற் கரியது அரண்.
muRRiyum muRRA teRintum aRaippaTuttumpaRRaR kariya taraN
Surya Mahadevan
பொருள் / உரை
முருகா எளிய உரை
முழுவதுமாகச் சூழ்ந்து முற்றுகையிட்டாலும், திடீரென ஒரு பக்கமாகத் தாக்கிப் பொருதாலும், உள்ளிருப்போரை வஞ்சனை செய்து ஏமாற்ற முயன்றாலும் எவ்வகையிலும் பகைவரால் கைப்பற்ற முடியாததே சிறந்த கோட்டை அரணாகும்.
• முற்றியும் முற்றாதெறிந்தும் = முற்றுகையிட்டாலும் ஒரு பக்கமாகத் தாக்கிப் போரிட்டாலும்,• அறைப்படுத்தும் பற்றற்கரியது அரண் = வஞ்சனை செய்தாலும் பகைவரால் கைப்பற்ற முடியாததே சிறந்த அரணாகும்.
மு.வரதராசன்
முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.
பரிமேலழகர்
முற்றியும் - புகலொடு போக்கு ஒழியும் வகை நெருங்கிச் சூழ்ந்தும்; முற்றாது எறிந்தும் - அங்ஙனம் சூழாது நெகிழ்ந்த இடன் நோக்கி ஒருமுகமாகப் பொருதும்; அறைப்படுத்தும் - அகத்தோரை அவர் தெளிந்தோரை விட்டுக் கீழறுத்துத் திறப்பித்தும்; பற்றற்கு அரியது அரண் - புறத்தோரால் கொள்ளுதற்கு அரியதே அரணாவது.(இம் மூன்று உபாயத்துள்ளும் முதலாவது எல்லாப் பொருளும்உடைமையானும், ஏனைய நலலாளுடைமையானும் வாயாவாயின.)
சாலமன் பாப்பையா
முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண்.
Meaning in English
A fort should be impregnable to foes who gird it round, Or aim there darts from far, or mine beneath the ground





