Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 714

பொருட்பால்அங்கவியல்72. அவையறிதல்

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்வான்சுதை வண்ணம் கொளல்.

oLiyArmun oLLiya rAtal veLiyArmunvAnsutai vaNNang koLal

Dishathana V

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறிவுடைய சான்றோர்களின் அவையில் தாமும் ஆழ்ந்த அறிவோடு விளங்க வேண்டும்; அறிவற்ற பாமரர்களின் அவையில் வெண்சுண்ணாம்பு போன்ற தூய எளிமையோடு அவர்களோடு இணைந்து கொள்ள வேண்டும்.

• ஒளியார்முன் ஒள்ளியராதல் = அறிஞர் அவையில் சிறந்த அறிவு வெளிப்படப் பேச வேண்டும்,• வெளியார்முன் வான்சுதை வண்ணம்கொளல் = அறிவற்றோர் அவையில் வெண்சுண்ணாம்பு போன்ற எளிமையோடு ஒத்துப் போக வேண்டும்.

மு.வரதராசன்

அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.

பரிமேலழகர்

ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்- அறிவால் ஒள்ளியாரவைக்கண் தாமும் ஒள்ளியராக; வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல் - ஏனை வெள்ளைகள் அவைக்கண் தாமும் வாலிய சுதையின் நிறத்தைக் கொள்க. ('ஒள்ளியார்' என்றது மிக்காரையும் ஒத்தாரையும். அது விகாரத்தால் 'ஒளியார்' என்று நின்றது. ஒள்ளியராதல்: தம் நூலறிவுஞ் சொல்வன்மையும் தோன்ற விரித்தல். அவை அறியாத புல்லாரை 'வெளியார்' என்றது. வயிரம் இல் மரத்தை 'வெளிறு' என்னும் வழக்குப்பற்றி. அவர் மதிக்கும் வகை அவரினும் வெண்மையுடையராக என்பார், 'வான் சுதை வண்ணம் கொளல்' என்றார். அவையளவு அறிந்தார் செய்யும் திறம் இதனான் தொகுத்துக் கூறப்பட்டது. பின்னர் விரித்துக் கூறுப.)

சாலமன் பாப்பையா

தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக.

Meaning in English

Before the bright ones shine as doth the light Before the dull ones be as purest stucco white

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout