Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 712

பொருட்பால்அங்கவியல்72. அவையறிதல்

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்நடைதெரிந்த நன்மை யவர்.

iTaiterintu nankuNarntu solluka sollinnaTaiterinta nanmai yavar

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொற்களின் நடையையும் பொருளின் தன்மையையும் உணர்ந்த நல்லறிஞர்கள், கேட்பவர் விரும்பிக் கேட்கும் தக்க சமயத்தை அறிந்து, சொல்லிலும் பொருளிலும் குற்றமில்லாமல் தெளிவாக ஆராய்ந்து பேச வேண்டும்.

• சொல்லின் நடைதெரிந்த நன்மையவர் = சொற்களின் நடையையும் பொருள் தரும் போக்கையும் அறிந்த நல்லறிஞர்கள்,• இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக = கேட்பவர் விரும்பும் தக்க தருணத்தை அறிந்து குற்றமின்றித் தெளிவாகப் பேச வேண்டும்.

மு.வரதராசன்

சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.

பரிமேலழகர்

சொல்லின் நடை தெரிந்த நன்மையவர் - சொற்களின் நடையினை ஆராய்ந்தறிந்த நன்மையினையுடையார்; இடைதெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக - அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அதன் செவ்வியை ஆராய்ந்து அறிந்து வழுப்படாமல் மிகவும் தெளிந்து சொல்லுக. (சொற்களின் நடையாவது: அம்மூவகைச் சொல்லும் செம்பொருள், இலக்கணப்பொருள், குறிப்புப் பொருள் என்னும் பொருள்களைப் பயக்குமாறு. செவ்வி: கேட்டற்கண் விருப்புடைமை. வழு: சொல் வழுவும் பொருள் வழுவும். (இவை இரண்டு பாட்டானும் ஒன்று சொல்லுங்கால் அவையறிந்தே சொல்ல வேண்டும் என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

மூவகைச் சொற்களும் பொருள் தரும் போக்கை நன்கு தெரிந்து கொண்ட நல்லறிவு படைத்தவர், சொற்குற்றமும் பொருட்குற்றமும் வந்துவிடாமல், கேட்போர் விரும்பிக் கேட்கும் நிலைமையையும் மிகத் தெளிவாக அறிந்து பேசுக.

Meaning in English

Good men to whom the arts of eloquence are known, Should seek occasion meet, and say what well they've made their own

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout