Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 410

பொருட்பால்அரசியல்41. கல்லாமை

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்கற்றாரோடு ஏனை யவர்.

vilangkoTu makka Lanaiyar ilangkunUlkaRRArO TEnai yavar

Shrinivas Krishnaswamy

பொருள் / உரை

முருகா எளிய உரை

பகுத்தறிவுள்ள மனிதர்களுக்கும் ஐந்தறிவு கொண்ட மிருகங்களுக்கும் இடையே எவ்வளவு பெரிய இடைவெளி உள்ளதோ, அதே போன்ற மாபெரும் இடைவெளி நல்ல நூல்களைக் கற்ற சான்றோர்களுக்கும் கல்வி கற்காத கல்லாதவர்களுக்கும் இடையே உண்டு.

• இலங்கு நூல் கற்றாரோடு = நல்லறிவை விளக்கும் சிறந்த நீதி நூல்களைக் கற்றுத் தேர்ந்த சான்றோர்களோடு ஒப்பிடும் போது,• ஏனையவர் = கல்வி கற்காத கல்லாத மனிதர்கள்,• விலங்கொடு மக்கள் அனையர் = விலங்குகளோடு பகுத்தறிவுடைய மனிதர்களை ஒப்பிடும் போது எவ்வளவு பெரிய வேற்றுமை உண்டோ அவ்வளவு பெரிய வேற்றுமை உடையவர்கள் ஆவர்.

மு.வரதராசன்

அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.

பரிமேலழகர்

விலங்கொடு மக்கள் அனையர் - விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையர் அத்துணைத் தீமையுடையர்; இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர் - விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர். (இலங்குநூல்: சாதிப் பெயர். விளங்குதல்: மேம்படுதல் . விலங்கின்மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார்கண்ணேயாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர்அல்லர் என்பதாம். மயக்க நிரல் நிரை. இதனால்அவர் மக்கட்பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.

Meaning in English

Learning's irradiating grace who gain, Others excel, as men the bestial train

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout