Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 407

பொருட்பால்அரசியல்41. கல்லாமை

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று.

nuNmAN nuzhaipula millAn ezhinalammaNmAN punaipAvai yaRRu

Vidhush Vaidyanathan

பொருள் / உரை

முருகா எளிய உரை

பல்வேறு கலைகளிலும் ஆழமாக ஊடுருவிப் புரிந்து கொள்ளும் நுட்பமான அறிவில்லாதவனின் உடலழகும் தோற்றப் பொலிவும், களிமண்ணால் அழகாகச் செய்து வண்ணம் தீட்டப்பட்ட உயிரற்ற மண் பொம்மையின் அழகைப் போன்றதேயாகும்.

• நுண் மாண் = நுட்பமானதும் மேன்மையானதுமான• நுழை புலம் இல்லான் = பல துறைகளிலும் ஆழமாக நுழைந்து அறியும் நுண்மையான கல்வி அறிவு இல்லாத ஒருவனது• எழில் நலம் = உடலழகும் கம்பீரமான தோற்றப் பொலிவும்,• மண் மாண் புனை பாவை அற்று = களிமண்ணால் வண்ணமயமாக நேர்த்தியாகச் செய்து வைக்கப்பட்ட அலங்கார உயிரற்ற பொம்மையின் அழகு போன்றதே ஆகும்.

மு.வரதராசன்

நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

பரிமேலழகர்

நுண்மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம் - நுண்ணியதாய், மாட்சிமைப்பட்டுப் பல நூல்களினும் சென்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும், மண், மாண் புனை பாவை அற்று - சுதையான் மாட்சிமைப்படப் புனைந்தபாவையுடைய எழுச்சியும் அழகும் போலும். (அறிவிற்கு மாட்சிமையாவது, பொருள்களைக் கடிதிற்காண்டலும்மறவாமையும் முதலாயின. 'பாவை' ஆகுபெயர். 'உருவின்மிக்கதோர் உடம்பது பெறுதலும் அரிது' (சீவக. முத்தி. 154)ஆகலான், எழில் நலங்களும் ஒரு பயனே எனினும், நூலறிவுஇல்வழிச் சிறப்பில என்பதாம். இதனால் அவர்வடிவழகால் பயன் இன்மை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.

Meaning in English

Who lack the power of subtle, large, and penetrating sense, Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout