Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 404

பொருட்பால்அரசியல்41. கல்லாமை

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்கொள்ளார் அறிவுடை யார்.

kallAtAn oTpang kazhiyanan RAyinungkoLLAr aRivuTai yAr

Brindha Sivakumar

பொருள் / உரை

முருகா எளிய உரை

நூல்களைக் கற்காத ஒருவன் பேசும் அறிவுரை தற்செயலாக நன்றாக அமைந்திருந்தாலும் கூட, நூலறிவு பெற்ற அறிஞர்கள் அதனை ஒரு முறையான சிறந்த அறிவாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

• கல்லாதான் ஒட்பம் = கல்வி கற்காத ஒருவனது இயல்பான அறிவு அல்லது சமயோசிதப் பேச்சு• கழிய நன்று ஆயினும் = தற்செயலாக ஒருவேளை மிகச் சிறந்ததாகத் தோன்றினாலும் கூட,• அறிவுடையார் = நிலையான நூலறிவு பெற்ற மெய்யறிஞர்கள்• கொள்ளார் = அதை உண்மையான முழுமையான அறிவாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

மு.வரதராசன்

கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

பரிமேலழகர்

கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் - கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும், அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார். (ஒண்மை: அறிவுடைமை, அது நன்றாகாது, ஆயிற்றாயினும் ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின், நிலைபெற்ற நூல் அறிவுடையார் அதனை மதியார் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

Meaning in English

From blockheads' lips, when words of wisdom glibly flow, The wise receive them not, though good they seem to show

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout