Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 403

பொருட்பால்அரசியல்41. கல்லாமை

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லா திருக்கப் பெறின்.

kallA tavarum naninallar kaRRArmunsollA tirukkap peRin

Abhay Jodhpurkar

பொருள் / உரை

முருகா எளிய உரை

கல்வி கற்ற சான்றோர்களின் முன்னிலையில் எதையும் பேசாமல் அமைதியாக இருக்கக் கற்றுக் கொண்டால், கல்வி கற்காதவர்கள் கூடத் தம் குறையை வெளிக்காட்டாமல் நல்லவர்களாகவே மதிக்கப்படுவர்.

• கற்றார் முன் = கல்வி கற்ற சான்றோர்கள் கூடி இருக்கும் அறிஞர் அவையில்,• சொல்லாது இருக்கப் பெறின் = அறியாமையினால் எதையும் பேசாமல் அமைதியாக அடங்கி இருக்க முடிந்தால்,• கல்லாதவரும் = கல்வி கற்காத பாமர மனிதர்களும் கூட• நனி நல்லர் = தங்களின் தவற்றினை வெளிப்படுத்தாமல் தப்பித்து மிகவும் நல்லவர்களாகவே மதிக்கப்படுவர்.

மு.வரதராசன்

கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.

பரிமேலழகர்

கல்லாதவரும் நனி நல்லர் - கல்லாதவரும் மிக நல்லராவர், கற்றார் முன் சொல்லாது இருக்கப்பெறின் - தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின். (உம்மை - இழிவுசிறப்பு உம்மை, தம்மைத்தாம் அறியாமையின் அது கூடாது என்பார், 'பெறின்' என்றும் கூடின் ஆண்டுத்தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை விரும்புவராகலானும் 'நனிநல்லர்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் கல்லாதார், அவைக்கண் சொல்லுதற்கு உரியரன்மை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.

Meaning in English

The blockheads, too, may men of worth appear, If they can keep from speaking where the learned hear

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout