தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்துவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
tavamaRain tallavai seytal putalmaRaintuvETTuvan puLsimizht taRRu
Shruthy Parthasarathy
பொருள் / உரை
முருகா எளிய உரை
துறவுக் கோலத்திற்குப் பின்னால் தன் சுயரூபத்தை மறைத்துக்கொண்டு தகாத தீய காரியங்களைச் செய்வது, ஒரு வேடன் புதருக்குப் பின்னால் பதுங்கி நின்று அப்பாவிப் பறவைகளை ஏமாற்றி வலைவீசிப் பிடிப்பது போன்ற வஞ்சகச் செயலாகும்.
• தவம் மறைந்து = துறவுக் கோலத்திற்குப் பின்னால் தன் கபடத்தை மறைத்துக்கொண்டு• அல்லவை செய்தல் = தகாத தீய செயல்களைச் செய்து மக்களை ஏமாற்றுவது,• வேட்டுவன் = ஒரு பறவை வேடன்• புதல் மறைந்து = புதர்களுக்குப் பின்னால் பதுங்கி நின்று• புள் சிமிழ்த்தற்று = அப்பாவிப் பறவைகளை வலைவீசி ஏமாற்றிப் பிடிப்பதைப் போன்ற கொடிய செயலாகும்.
மு.வரதராசன்
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.
பரிமேலழகர்
தவம் மறைந்து அல்லவை செய்தல் - அவ் வலிஇல் நிலைமையான் தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல், வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தற்று - வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று புட்களைப் பிணித்தாற்போலும்.( 'தவம்' ஆகுபெயர்.தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத் தன்வயத்தாக்குதல், இதுவும் இத்தொழில் உவமையான் அறிக.)
சாலமன் பாப்பையா
மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.
Meaning in English
'Tis as a fowler, silly birds to snare, in thicket lurks When, clad in stern ascetic garb, one secret evil works





