Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 272

அறத்துப்பால்துறவறவியல்28. கூடாவொழுக்கம்

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்தான்அறி குற்றப் படின்.

vAnuyar tORRam evanseyyun tannenjsattAnaRi kuRRap paTin

Bhavatharini Anantharaman

பொருள் / உரை

முருகா எளிய உரை

தன் மனம் தவறு என்று தெரிந்தே செய்த குற்றங்களில் மூழ்கியிருக்கும்போது, ஒருவன் வானத்தைப்போல் உயர்ந்த தவக்கோலத்தைப் பூண்டிருப்பதால் அவனுக்கு எந்தவொரு நன்மையும் கிட்டாது.

• தன் நெஞ்சம் = ஒருவனுடைய சொந்த மனமானது• தான் அறி = தான் குற்றம் என்று தெரிந்தே செய்த• குற்றப்படின் = பாவச் செயல்களிலேயே மூழ்கிக் கிடக்குமானால்,• வான் உயர் தோற்றம் = வானத்தைப் போல உயர்ந்து விளங்கும் அவனது தவவேடமானது• எவன் செய்யும் = அவனுக்கு என்ன நன்மையைத் தந்துவிடப் போகிறது? (எந்தப் பயனும் தராது).

மு.வரதராசன்

தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்.

பரிமேலழகர்

வான் உயர் தோற்றம் எவன் செய்யும் - ஒருவனுக்கு வான் போல உயர்ந்த தவவேடம் என்ன பயனைச் செய்யும்; தான் அறி குற்றம் தன் நெஞ்சம் படின் - தான் குற்றம் என்று அறிந்த அதன் கண்ணே தன் நெஞ்சு தாழும் ஆயின். ( 'வான் உயர் தோற்றம்' என்பது 'வான் தோய்குடி' (நாலடி 142) என்றாற்போல இலக்கணை வழக்கு. அறியாது செய்த குற்றமல்லது அறிந்து வைத்துச் செய்த குற்றம் கழுவப்படாமையின், நெஞ்சு குற்றத்ததாயேவிடும்; விடவே நின்ற வேடமாத்திரத்துக்குப் புறத்தாரை வெருட்டுதலே அல்லது வேறு பயன் இல்லை என்பதாம்.)

சாலமன் பாப்பையா

தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?

Meaning in English

What gain, though virtue's semblance high as heaven his fame exalt, If heart dies down through sense of self-detected fault

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout