கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்குஉரைத்தலும் நாணுத் தரும்.
karattalum ARREnin nOyainOy seytArkkuraittalum nANut tarum
Vinitha Dharmarajan
பொருள் / உரை
முருகா எளிய உரை
என் நெஞ்சில் கொதிக்கும் இந்தக் காமநோயைப் பிறர் அறியாமல் மறைத்து வைக்கவும் என்னால் இயலவில்லை; அதே சமயம் இந்தத் துன்பத்தை உண்டாக்கிய காதலரிடம் ஆள் அனுப்பி உரைப்பதற்கும் பெண்மைக்குரிய நாணம் தடையாக உள்ளதே!
• இந்நோயைக் கரத்தலும் ஆற்றேன் = உள்ளத்தில் கொதிக்கும் இந்தக் காதல் நோயைப் பிறர் அறியாமல் என்னால் மறைக்கவும் முடியவில்லை;• நோய் செய்தார்க்கு உரைத்தலும் = அதே சமயம் இந்தத் துன்பத்தை உண்டாக்கிய காதலரிடம் தூது விட்டுச் சொல்வதற்கும்,• நாணுத் தரும் = பெண்மைக்குரிய வெட்கமானது தடையாக நின்று நாணத்தைத் தருகிறதே!
மு.வரதராசன்
இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.
பரிமேலழகர்
('ஈண்டையார் அறியாமல் மறைத்தல் ஆண்டையார் அறியத் தூது விடுதல் என்னும் இரண்டனுள் ஒன்று செயல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது). இந்நோயைக் கரத்தலும் ஆற்றேன்-இந்நோயை ஈண்டை அறியாமல் மறைத்தலும் வல்லேனாகின்றிலேன்; நோய் செய்தார்ககு உரைத்தலும் நாணுத் தரும் - ஆகாக்கால், நோய் செய்தவர்க்கு உரைக்க எனின், அதுவும் எனக்கு நாணினைத் தாரா நின்றது, இனி என் செய்கோ? (ஒருகாலைக்கு ஒருகால் மிகுதலின், 'கரத்தலும் ஆற்றேன்' என்றும், சேயிடைச் சென்றவர்க்கு இது சொல்லித் தூதுவிட்டால் இன்னும் இருந்தேன் என்பது பயக்கும் என்னும் கருத்தால், 'நாணுத் தரும்' என்றும் கூறினாள்.)
சாலமன் பாப்பையா
இந்தத் துன்பத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. துன்பத்தைத் தந்த இவருக்கு (எழுத்தில் தொலைபேசியில்) இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது.
Meaning in English
I cannot hide this pain of mine, yet shame restrains When I would tell it out to him who caused my pains





