Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1139

இன்பத்துப்பால்களவியல்114. நாணுத்துறவுரைத்தல்

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்மறுகின் மறுகும் மருண்டு.

aRikilAr ellArum enREyen kAmammaRukin maRukum maruNTu

R. Guru Ayyadurai

பொருள் / உரை

முருகா எளிய உரை

'நான் அடக்கமாக இருப்பதால் ஊரில் உள்ள யாரும் என் காதலை அறியவில்லை' என்று நினைத்து, என்னுடைய காதலானது தெருவெங்கும் தானே வெளிப்பட்டு அலராகிச் சுற்றிச் சுழன்று திரிகிறது!

• எல்லாரும் அறிகிலார் என்றே = 'நான் அடங்கி இருப்பதால் ஊரார் யாரும் என் காதலை அறியவில்லை' என்று எண்ணி;• என் காமம் = என்னுடைய காதலானது,• மறுகின் மருண்டு மறுகும் = ஊர்த் தெருக்களிலெல்லாம் மயங்கிச் சுழன்று பலரும் அறியும்படி அம்பலமாகித் திரிகிறது!

மு.வரதராசன்

அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

பரிமேலழகர்

(இதுவும் அது.) எல்லாரும் அறிகிலார் என்று - யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர், இனி அவ்வாறு நில்லாது யானே வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி; என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமம் இவ்வூர் மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது. (மயங்குதல் - அம்பலாதல், மறுகுதல் - அலராதல், 'அம்பலும் அலருமாயிற்று'. இனி 'அறத்தொடு நிற்றல் வேண்டும்', என்பதாம் 'அறிவிலார்' என்பதூஉம் பாடம்.)

சாலமன் பாப்பையா

என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.

Meaning in English

'There's no one knows my heart,' so says my love, And thus, in public ways, perturbed will rove

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout