Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1033

பொருட்பால்ஒழிபியல்104. உழவு

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்.

uzhutuNTu vAzhvArE vAzhvArmaR RellAmtozhutuNTu pinsel pavar

PAYANAM WITH PANDIYAN

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் = நிலத்தை உழுது அதனால் விளையும் உணவை உண்டு வாழ்பவர்களே தன்மானத்தோடு வாழ்கின்ற மனிதர்கள் ஆவர்;• மற்று எல்லாம் = உழவு அல்லாத மற்ற தொழில்களைச் செய்வோர் அனைவரும்,• தொழுது உண்டு = உணவுக்காகப் பிறரை வணங்கிக் கையேந்திப் பெற்று,• பின் செல்பவர் = அவர்களுக்குப் பின்னால் கைகட்டிச் செல்பவர்களே ஆவர்.எளிய விளக்கம்:நிலத்தை உழுது அதனால் கிடைக்கும் தானியங்களை உண்டு சுயமரியாதையோடு வாழ்கின்ற உழவர்களே உண்மையாக வாழ்பவர்கள் ஆவர்; மற்றவர்கள் அனைவரும் உணவுக்காகப் பிறரை வணங்கி, அவர் கொடுப்பதை உண்டு, அவர்கள் பின்னே செல்ல வேண்டியவர்களாகவே இருக்கின்றனர்.

மு.வரதராசன்

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

பரிமேலழகர்

உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் - யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே, தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் - மற்றையாரெல்லாம் பிறரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவரைப் பின்செல்கின்றவர். ['மற்று' என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட்பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து.)

சாலமன் பாப்பையா

பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.

Meaning in English

Who ploughing eat their food, they truly live: The rest to others bend subservient, eating what they give

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout