Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1031

பொருட்பால்ஒழிபியல்104. உழவு

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை.

suzhanRumErp pinna tulakam atanAluzhantum uzhavE talai

Chanderan

பொருள் / உரை

முருகா எளிய உரை

மனிதர்கள் எத்தனையோ மாற்றுத் தொழில்களைச் செய்து உலகம் முழுதும் சுற்றித் திரிந்தாலும், இறுதியில் பசியைப் போக்கும் உணவுக்காக ஏர் பிடிக்கும் உழவனின் பின்னேதான் வந்து நிற்க வேண்டியுள்ளது; ஆகையால், எத்தனை உடல் வருத்தங்கள் ஏற்பட்டாலும் உழவுத் தொழிலே உலகத்தின் தலையாய தொழிலாகும்.

• சுழன்றும் = பல தொழில்களைச் செய்து உலகம் சுற்றித் திரிந்தாலும்,• ஏர்ப்பின்னது உலகம் = முடிவில் உணவுக்காக ஏரின் பின்னால்தான் (உழவின் பின்) வந்து நிற்க வேண்டியுள்ளது;• அதனால் = ஆகையால்,• உழந்தும் = எவ்வளவு உடல் வருத்தங்கள் பட்டாலும் கூட,• உழவே தலை = தொழில்களில் எல்லாம் தலையாய முதன்மைத் தொழில் உழவுத் தொழிலேயாகும்.

மு.வரதராசன்

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

பரிமேலழகர்

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் - உழுதலான் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிறதொழில்களைச் செய்து திரிந்தும், முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை - ஆதலான் எலலா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே. (ஏர் - ஆகுபெயர். பிற தொழில்களால் பொருளெய்திய வழியும், உணவின் பொருட்டு உழுவார்கண் செல்ல வேண்டுதலின், 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றும், வருத்தமிலவேனும் பிற தொழில்கள் கடை என்பது போதர, 'உழந்தும் உழவே தலை' என்றும் கூறினார். இதனால் உழவினது சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.

Meaning in English

Howe'er they roam, the world must follow still the plougher's team; Though toilsome, culture of the ground as noblest toil esteem

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout