Thiruvalluvar, author of Thirukkural

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்அறிமுகம் What is Thirukkural? An Introduction

என்ன இதுWhat Thirukkural is

திருக்குறள் என்பது தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிய அறநூல். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பிரிவுகளில், 133 அதிகாரங்களில், 1,330 குறட்பாக்களைக் கொண்டது. ஒவ்வொரு குறளும் இரண்டே அடிகளில் அமைந்த குறள் வெண்பா; சொற்களின் சிக்கனத்திலேயே பொருள் நிறைந்து விளங்குவது இதன் தனிச்சிறப்பு.

அறம் (38 அதிகாரங்கள்), பொருள் (70 அதிகாரங்கள்), இன்பம் (25 அதிகாரங்கள்) ஆகிய மூன்று பிரிவுகளும் தனிமனித நெறியையும், அரசு மற்றும் சமூக நெறியையும், இல்லற இன்ப நெறியையும் தழுவி நிற்கின்றன. இத்தளத்தில் திருக்குறளின் 1,330 குறட்பாக்களும் அதிகார வாரியாகவும் தேடலாகவும் படிக்கக் கிடைக்கின்றன.

யார், எப்போது?

Who, and when

தெய்வப் புலவர் திருவள்ளுவர் உலக மாந்தர் அனைவருக்கும் பொதுவான வாழ்க்கை நெறியை "திருக்குறள்" என்னும் உலகப் பொதுமறையாக அருளிய மகா ஞானி. மயிலாப்பூரில் அவதரித்து, நெசவுத் தொழில் செய்து, பதிவிரதா தர்மத்தின் சிகரமான வாசுகி அம்மையாருடன் தூய இல்லற தர்மத்தை வாழ்ந்து காட்டினார். அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலில் 133 அதிகாரங்களில் 1,330 குறட்பாக்களை அருளினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பொற்றாமரைக் குளத்து தெய்வீகச் சங்கப் பலகையில் திருக்குறள் அரங்கேற்றப்பட்டபோது, பலகை திருக்குறளுக்கு மட்டுமே இடமளித்துச் சுருங்கி நின்ற அற்புதத்தைக் கண்டு புலவர்கள் "திருவள்ளுவ மாலை" பாடிப் போற்றினர். மயிலாப்பூரில் முக்தி அடைந்த இவரது புனித சமாதி திருக்கோவில் இன்றும் ஞான பூமியாகத் திகழ்கிறது.

திருவள்ளுவரின் முழு வரலாற்றை தனிப் பக்கத்தில் காணலாம்.

இயற்றியவர் Poet

Thiruvalluvar, author of Thirukkuralதிருவள்ளுவர்Thiruvalluvar

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout