திருப்புகழ் 965 நீதத்துவமாகி (மதுரை)

தானத் தனதான தானத் ...... தனதான
நீதத்  துவமாகி  ..  நேமத்  ......  துணையாகிப் 
பூதத்  தயவான  ..  போதைத்  ......  தருவாயே 
நாதத்  தொனியோனே  ..  ஞானக்  ......  கடலோனே 
கோதற்  றமுதானே  ..  கூடற்  ......  பெருமாளே. 
  • நீதத் துவமாகி
    நீதித்தன்மை கொண்டதாய்,
  • நேமத் துணையாகி
    சீரிய ஒழுக்கத்தில் ஒழுகுவதற்குத் துணை செய்வதாய்,
  • பூதத் தயவான
    உயிர்வர்க்கங்களின் மேல் கருணைசெய்வதாய் விளங்கும்
  • போதைத் தருவாயே
    நல்லறிவைத் தந்தருள்வாயாக.
  • நாதத் தொனியோனே
    ஒலியும் ஓசையுமாய் விளங்குபவனே,
  • ஞானக் கடலோனே
    ஞான சமுத்திரமே,
  • கோதற்ற அமுதானே
    குற்றமில்லாத அமிர்தத்தைப் போன்றவனே,
  • கூடற் பெருமாளே.
    நான்மாடக்கூடல் என்னும் மதுரைப்பதியில் உள்ள பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com