திருப்புகழ் · 949தீராப் பிணிதீர (பேரூர்)theerAppiNitheera
தானாத் தனதான தானாத் ...... தனதான
Yaazh Music
தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான
ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே
பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே
பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே.
பத உரைword meanings
- தீராப் பிணிதீர
முடிவே இல்லாத பிறவி நோய் முடிவு பெறவும், - சீவ ஆத்தும ஞான
ஜீவனாகிய ஆத்மாவைப் பற்றிய இந்தச் சிற்றுயிர் ஞான நிலை பெறுவதற்கும், - ஊராட்சியதான ஓர்வாக்கு அருள்வாயே
உலகெல்லாம் ஆட்சி செய்யக் கூடிய ஒப்பற்ற உபதேச மொழியொன்றை நீ எனக்கு ஓதி அருள்வாயாக. - பாரோர்க் கிறைசேயே
உலகத்துக்கெல்லாம் தலைவராகிய சிவபிரானின் குமாரனே, - பாலாக் கிரிராசே
இளையோனே, குன்றுகளுக்கெல்லாம் அரசனான குமரனே, - பேராற் பெரியோனே
புகழால் மிகவும் பெரியவனே, - பேரூர்ப் பெருமாளே.
பேரூர்த் தலத்தில்* எழுந்தருளியுள்ள பெருமாளே.
குறிப்புகள் · notes
- * பேரூர் கோயமுத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 3 மைலில் உள்ளது.
- * PErUr is about 3 miles off Coimbatore Railway Station.
