திருப்புகழ் 557 பகலிரவினில் (சென்னிமலை)

தனதனதனத் ...... தனதான
தனதனதனத் ...... தனதான
பகலிரவினிற்  ......  றடுமாறா 
பதிகுருவெனத்  ......  தெளிபோத 
ரகசியமுரைத்  ......  தநுபூதி 
ரதநிலைதனைத்  ......  தருவாயே 
இகபரமதற்  ......  கிறையோனே 
இயலிசையின்முத்  ......  தமிழோனே 
சகசிரகிரிப்  ......  பதிவேளே 
சரவணபவப்  ......  பெருமாளே. 
  • பகலிரவினில் தடுமாறா
    நினைவு, மறப்பு என்ற நிலைகளிலே தடுமாறாது,
  • பதிகுருவெனத் தெளிபோத
    முருகனே குருநாதன் என்று தெளிகின்ற ஞானத்தின்
  • ரகசியமுரைத்து
    பரம ரகசியத்தை அடியேனுக்கு உபதேசித்து,
  • அநுபூதி ரதநிலைதனைத் தருவாயே
    ஒன்றுபடும் ரசமான பேரின்ப நிலையினைத் தந்தருள்வாயாக.
  • இகபரமதற்கு இறையோனே
    இம்மைக்கும் மறுமைக்கும் தலைவனாக விளங்குபவனே,
  • இயலிசையின் முத்தமிழோனே
    இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் உரியவனே,
  • சகசிரகிரிப்* பதிவேளே
    இவ்வுலகில் மேலான திருச்சிரா மலையின் செவ்வேளே,
  • சரவணபவப் பெருமாளே.
    சரவணபவப் பரம்பொருளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com