திருப்புகழ் · 330முட்டுப் பட்டு (காஞ்சீபுரம்)

muttuppattu

தத்தத் தத்தத் ...... தனதான
தத்தத் தத்தத் ...... தனதான
முட்டுப் பட்டுக் ...... கதிதோறும்
முற்றச் சுற்றிப் ...... பலநாளும்
தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச்
சற்றுப் பற்றக் ...... கருதாதோ
வட்டப் புட்பத் ...... தலமீதே
வைக்கத் தக்கத் ...... திருபாதா
கட்டத் தற்றத் ...... தருள்வோனே
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • முட்டுப் பட்டுக் கதிதோறும்
    சங்கடப்பட்டு, தேவ, மனித, நரக, விலங்கு என்ற நால்வகை கதிகளிலும்
  • முற்றச் சுற்றிப் பலநாளும்
    முழுவதுமாக அலைந்து திரிந்து பல பிறவியிலும்
  • தட்டுப் பட்டுச் சுழல்வேனை
    தடுமாற்றம் அடைந்து சுழல்கின்ற என்னை
  • சற்றுப் பற்றக் கருதாதோ
    சிறிதாவது கவனித்துக்கொள்ள நினைத்தலாகாதோ?
  • வட்டப் புட்பத் தலமீதே
    வட்டமாகிய என் இதயகமல பீடத்தின் மேலே
  • வைக்கத் தக்கத் திருபாதா
    வைத்துப் பூஜிக்கத்தக்க திருவடிகளை உடையவனே,
  • கட்டத்து அற்றத்து அருள்வோனே
    துன்பமுறும் சமயத்தில் வந்து அருள் புரிபவனே,
  • கச்சிச் சொக்கப் பெருமாளே.
    காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits