திருப்புகழ் · 329அற்றைக்கு இரைதேடி (காஞ்சீபுரம்)
atRaikkuiraithEdi
தத்தத் தனதான தத்தத் ...... தனதான
தத்தத் தனதான தத்தத் ...... தனதானா
அற்றைக் கிரைதேடி அத்தத் ...... திலுமாசை
பற்றித் தவியாத பற்றைப் ...... பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் ...... தொளைசீலா
கற்றுற் றுணர்போதா கச்சிப் ...... பெருமாளே.
பத உரை · word meanings
- அற்றைக்கு இரைதேடி
அன்றாடத்துக்கு வேண்டிய உணவைத் தேடி, - அத்தத்திலும் ஆசை
பொருள் மீதும் ஆசையினை - பற்றித் தவியாத பற்றை
வைத்துக்கொண்டு தவிக்காத உறுதிப்பாடை - பெறுவேனோ
யான் பெறுதற்கு இயலுமோ? - வெற்றிக் கதிர்வேலா
வெற்றியே விளங்கும் ஜோதி வேலவனே, - வெற்பைத் தொளைசீலா
கிரெளஞ்சமலையைத் தொளைத்த பரிசுத்தனே, - கற்றுற் றுணர்போதா
கற்றுத் தியானித்து உணரத்தக்க ஞானஸ்வரூபனே, - கச்சிப் பெருமாளே.
காஞ்சிபுரத்தில் அமர்ந்த பெருமாளே.



