தானத்தானத் ...... தனதானா
தானத்தானத் ...... தனதானா
கோலக்காதிற் ...... குழையாலே
கோதிச்சேர்மைக் ...... குழலாலே
ஞாலத்தாரைத் ...... துயரேசெய்
*நாரிக்காசைப் ...... படலாமோ
மேலைத்தேவர்க் ...... கரியோனே
வீரச்சேவற் ...... கொடியோனே
காலப்பாசத் ...... துயர்தீராய்
கானப்பேரிற் ...... பெருமாளே.
குறிப்பு:
*நாரி=பெண்.