திருப்புகழ் 1332 அனத்தோடொப்பா (திருக்கானப்பேர்)

தனத்தானத்தா தனதன தனதன ...... தனதான
தனத்தானத்தா தனதன தனதன ...... தனதான
அனத்தோடொப்பா  மெனுநடை  மடவியர்  ......  அநுராகம் 
அதற்கேசிச்சீ  இனமென  துயிர்கெடல்  ......  அழகாமோ 
உனைப்பாடிப்பே  றுறுமொரு  வரமினி  ......  உதவாயோ 
உவப்பாகத்தே  வர்கள்சிறை  விடவிடும்  ......  அயிலோனே 
முனைப்பாடிக்கே*  திரிதரும்  அரிதிரு  ......  மருகோனே 
முகிற்கே  நத்தா**  விரிதரு  கலபநன்  ......  மயிலோனே 
தினைக்காவற்கே  உரியவள்  மனமகிழ்  ......  மணவாளா 
திருக்கானப்பேர்  நகர்தனி  லினிதுறை  ......  பெருமாளே. 
குறிப்பு: 
*முனைப்பாடிக்கே=முன்  ஆயர்  பாடியில் 
**நத்தா=விரும்பி. 

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com