திருப்புகழ் 1331 பந்தப்பொற் பார (திருப்பூவணம்)

தந்தத்தத் தானன தானன
தந்தத்தத் தானன தானன
தந்தத்தத் தானன தானன ...... தனதானா
பந்தற்பொற்  பாரப  யோதர 
முந்தச்சிற்  றாடைசெய்  மேகலை 
பண்புற்றுத்  தாளொடு  வீசிய  ......  துகிலோடே 
பண்டைச்சிற்  சேறியில்  வீதியில் 
கண்டிச்சித்  தாரொடு  மேவிடு 
பங்குக்கைக்  காசுகொள்  வேசையர்  ......  பனிநீர்தோய் 
கொந்துச்சிப்  பூவணி  தோகையர் 
கந்தக்கைத்  தாமரை  யாலடி 
கும்பிட்டுப்  பாடிசை  வீணையர்  ......  அநுராகங் 
கொண்டுற்றுப்  பாயலின்  மூழ்கிய 
சண்டிச்சிக்  சீயென  வாழ்துயர் 
குன்றப்பொற்  பாதக்ரு  பாநிதி  ......  அருள்வாயே 
அந்தத்துக்  காதியு  மாகியு 
மந்திக்குட்  டானவ  னானவ 
னண்டத்தப்  பாலுற  மாமணி  ......  ஒளிவீசும் 
அங்கத்தைப்  பாவைசெய்  தேயுயர் 
சங்கத்திற்  றேர்தமி  ழோதிட 
அண்டிக்கிட்  டார்கழு  வேறினர்  ......  ஒருகோடி 
சந்தத்திக்  காளுநி  சாசரர் 
வெந்துட்கத்  தூளிப  டாமெழ 
சண்டைச்சொற்  றார்பட  வேவயில்  ......  விடுவோனே 
தங்கச்சக்  ராயுதர்  வானவர் 
வந்திக்கப்  பேரரு  ளேதிகழ் 
தம்பப்பொற்  பூவண  மேவிய  ......  பெருமாளே. 

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com