திருப்புகழ் 1329 அறப்பாவை அத்தற்கு (திருப்பூவணம்)

தனத்தான தத்தத் ...... தனதானா
தனத்தான தத்தத் ...... தனதானா
அறப்பாவை  அத்தற்  ......  கருள்பாலா 
அளித்தாது  வெட்சித்  ......  திருமார்பா 
குறப்பாவை  அற்பிற்  ......  புணர்வோனே 
குலத்தேவ  வர்க்கப்  ......  பரிபாலா 
மறப்பாத  கத்துற்  ......  றுழல்வேனோ 
மலர்த்தாள்வ  ழுத்தக்  ......  க்ருபையீவாய் 
சிறப்பான  முத்திக்  ......  கொருவாழ்வே 
திருப்பூவ  ணத்திற்  ......  பெருமாளே. 
  • முருகா! நீ அறப்பாவையான தேவசேனையின் இனத்தைச் சார்ந்த தேவர்களுக்கு அருளுகின்றவன். எப்போதும் வெற்றியை அளிக்கக்கூடிய வெட்சி மாலையை மார்பினில் அணிந்தவன்.
  • குறப் பாவையாகிய வள்ளியின் அன்பிற்கு அடிமையானவன். தேவர்களின் குலம் பெருக பரிபாலனம் செய்வோன்.
  • இவ்வளவு உயரிய நீ, மிகக் கொடிய பாவங்கள் செய்து மாபாதகத்துள் உழலும் என்னைக் காத்து மலர்போன்ற உனது தாளை வணங்கிட அருள் செய்வாய்.
  • சிறப்பான முத்தியை அளிக்கக் கூடிய பூவணத்தில் எழுந்தருளியுள்ள பெருமானே!

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com