திருப்புகழ் 1301 பொன்னை விரும்பிய (பொதுப்பாடல்கள்)

தன்ன தனந்தன ...... தனதான
பொன்னை  விரும்பிய  ......பொதுமாதர் 
புன்மை  விரும்பியெ  ......  தடுமாறும் 
என்னை  விரும்பிநி  ......  யொருகால்நின் 
எண்ணி  விரும்பவு  ......  மருள்வாயே 
மின்னை  விரும்பிய  ......  சடையாளர் 
மெய்யின்  விரும்பிய  ......  குருநாதா 
அன்னை  விரும்பிய  ......  குறமானை 
அண்மி  விரும்பிய  ......  பெருமாளே. 
  • பொன்னை விரும்பிய பொதுமாதர்
    தங்கத்தை நாடி விரும்புகின்ற விலைமாதர்களின்
  • புன்மை விரும்பியெ தடுமாறும்
    இழிவான குணத்தையே விரும்பித் தடுமாறுகின்ற (போதிலும்)
  • என்னை விரும்பி நி யொருகால்
    என்னை விரும்பி நீ ஒரு முறையேனும்
  • நின்(னை) எண்ணி விரும்பவும் அருள்வாயே
    உன்னை தியானித்து நான் விரும்புமாறு அருள் புரிவாயாக.
  • மின்னை விரும்பிய சடையாளர்
    மின்னலைப்போல் ஒளி வீசும் செஞ்சடைப் பெருமானாகிய சிவபிரான்
  • மெய்யின் விரும்பிய குருநாதா
    உண்மைப் பொருளை விரும்பி நிற்க, அவருக்கு உபதேசம் செய்த குருநாதனே,
  • அன்னை விரும்பிய குறமானை
    உமையன்னை விரும்பிய குறமான் வள்ளியை
  • அண்மி விரும்பிய பெருமாளே.
    நெருங்கி விருப்பம் கொண்ட பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com