திருப்புகழ் · 943இறவாமற் பிறவாமல் (அவிநாசி)

தனதானத் தனதான தனதானத் ...... தனதான

Thiruppugazh Anbargal

இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.

பத உரை

  • இறவாமற் பிறவாமல்
    இறவாத வரம் தந்தும், மீண்டும் பிறவாத வரம் தந்தும்,
  • எனையாள்சற்குருவாகி
    என்னை ஆண்டருளும் நல்ல குருவாகியும்,
  • பிறவாகி
    மற்ற எல்லாத் துணைகள் ஆகியும்,
  • திரமான பெருவாழ்வைத் தருவாயே
    நிலையான (ஸ்திரமான) முக்தியாம் மோக்ஷவீட்டை அருள்வாயாக.
  • குறமாதைப் புணர்வோனே
    குறப்பெண் வள்ளியை மணந்தவனே,
  • குகனேசொற் குமரேசா
    குகனே, புகழ் வாய்ந்த குமரேசனே,
  • அறநாலைப் புகல்வோனே
    அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் உபதேசிப்பவனே,
  • அவிநாசிப் பெருமாளே.
    அவிநாசியில்* வீற்றிருக்கும் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * அவிநாசி திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 8 மைலில் உள்ளது.
  • * AvinAsi is 8 miles north of ThiruppUr Railway Station.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout