திருப்புகழ் · 923மதியால் வித்தகன் (கருவூர்)madhiyAlviththagan
தனதானத் தனதான தனதானத் ...... தனதான
Yaazh Music
மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.
பத உரைword meanings
- மதியால் வித்தகனாகி
என் புத்தியைக் கொண்டு நான் ஒரு பேரறிவாளனாகி, - மனதால் உத்தமனாகி
என் மனம் நன்னெறியின் செல்ல அதனால் நான் ஒரு உத்தம மனிதனாகி, - பதிவாகிச் சிவஞான
சிவ ஞானத்தில் என் சிந்தை ஊன்றுவதாகி, - பரயோகத்து அருள்வாயே
மேலான யோக வழியை நான் பற்றும்படியாக அருள் புரிவாயாக. - நிதியே நித்தியமே யென் நினைவே
என் செல்வமே, அழிவில்லாப் பொருளே, எனது தியானப் பொருளே, - நற் பொருளாயோய்
சிறந்த பேரின்பப் பொருளானவனே, - கதியே சொற் பரவேளே
எனக்குப் புகலிடமே, எல்லாராலும் புகழப்பெறும் மேலான செவ்வேளே, - கருவூரிற் பெருமாளே.
கருவூர்த்* தலத்தில் எழுந்தருளிய பெருமாளே.
குறிப்புகள் · notes
- * கருவூர் திருச்சிக்கு மேற்கே 45 மைலில் உள்ள கரூர் ஆகும். சோழநாட்டின் தலைநகரான வஞ்சியும் இதுவே.
- * KaruvUr - now known as KarUr - is 45 miles west of Thiruchi. It was once the capital city of ChOzha Kingdom.
