திருப்புகழ் 819 நீதானெத்தனை (திருவாரூர்)

தானானத் தனதான தானானத் ...... தனதான
நீதானெத்  தனையாலும்  நீடூழிக்  ......  க்ருபையாகி 
மாதானத்  தனமாக  மாஞானக்  ......  கழல்தாராய் 
வேதாமைத்  துனவேளே  வீராசற்  ......  குணசீலா 
ஆதாரத்  தொளியானே  ஆரூரிற்  ......  பெருமாளே. 
  • நீதானெத் தனையாலும்
    நீ ஒருவன்தான் எல்லா வகையாலும்
  • நீடூழிக் க்ருபையாகி
    ஊழிக்காலம் வரைக்கும் எப்போதும் அருள் நிறைந்தவனாகி
  • மாதானத் தனமாக
    சிறந்த தானப் பொருளாக
  • மாஞானக் கழல்தாராய்
    மேலான ஞான பீடமாகிய உன் திருவடிகளைத் தந்தருள்வாய்.
  • வேதாமைத்துனவேளே
    பிரம்மனுக்கு மைத்துனனாகிய முருக வேளே,
  • வீரா சற்குணசீலா
    வீரனே, நற்குணங்கள் யாவும் நிரம்பப் பெற்றவனே,
  • ஆதாரத்து ஒளியானே
    ஆறு* ஆதாரங்களிலும் ஒளிவிட்டுப் பிரகாசிப்பவனே,
  • ஆரூரிற் பெருமாளே.
    திருவாரூரில்** இருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com