திருப்புகழ் 635 அல்லில் நேரும் (வள்ளியூர்)

தய்ய தானன ...... தனதான
அல்லில்  நேருமி  ......  னதுதானும் 
அல்ல  தாகிய  ......  உடல்மாயை 
கல்லி  னேரஅ  ......  வழிதோறுங் 
கையு  நானுமு  ......  லையலாமோ 
சொல்லி  நேர்படு  ......  முதுசூரர் 
தொய்ய  வூர்கெட  ......  விடும்வேலா 
வல்லி  மாரிரு  ......  புறமாக 
வள்ளி  யூருறை  ......  பெருமாளே. 
  • அல்லில் நேரும் மின்னதுதானும்
    இரவில் தோன்றும் மின்னல் நிலைக்கும் நேரம்கூட
  • அல்லதாகிய உடல் மாயை
    நிலைக்காத இந்த உடல் வெறும் மாயை.
  • கல்லி னேரஅவ்வழிதோறும்
    கல் நிறைந்த அந்த மாய வாழ்க்கை வழியில்
  • கையும் நானும் உலையலாமோ
    என் ஒழுக்க நெறியும் அடியேனும் நிலைகுலையலாமோ?
  • சொல்லி நேர்படு முதுசூரர்
    தம் வீரதீரத்தைச் சொல்லிக்கொண்டு எதிர்த்த பெரும்சூரர்
  • தொய்ய வூர்கெட விடும்வேலா
    அழிய, அவர்கள் ஊர் பாழ்பட செலுத்திய வேலாயுதனே,
  • வல்லிமார் இருபுறமாக
    கொடிபோன்ற தேவிமார் (வள்ளி, தேவயானை) இருபுறமும் ஆக
  • வள்ளியூர் உறை பெருமாளே.
    வள்ளியூரில்* குடிகொண்ட பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com