திருப்புகழ் · 363நாடித் தேடி (திருவானைக்கா)

nAdiththEdi

தானத் தானத் ...... தனதான
தானத் தானத் ...... தனதான
நாடித் தேடித் ...... தொழுவார்பால்
நானத் தாகத் ...... திரிவேனோ
மாடக் கூடற் ...... பதிஞான
வாழ்வைச் சேரத் ...... தருவாயே
பாடற் காதற் ...... புரிவோனே
பாலைத் தேனொத் ...... தருள்வோனே
ஆடற் றோகைக் ...... கினியோனே
ஆனைக் காவிற் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • நாடித் தேடித் தொழுவார்பால்
    உன்னை விரும்பித் தேடித் தொழும் அடியார்களிடம்
  • நான் நத்தாகத் திரிவேனோ
    நான்விருப்பம் உள்ளவனாகத் திரியமாட்டேனோ?
  • மாடக் கூடற் பதி
    நான்மாடற்கூடல் என்ற மதுரையம்பதியில் உள்ள
  • ஞான வாழ்வைச் சேர
    (துவாதசாந்த நிலையில்* கூடும்) ஞானவாழ்வை அடையும்படி
  • தருவாயே
    அருள் புரிவாயாக.
  • பாடற் காதற் புரிவோனே
    தமிழிசையில் பாடினால் ஆசையோடு கேட்பவனே,
  • பாலைத் தேனொத்து அருள்வோனே
    பாலையும் தேனையும் போல் இனிமையாக அருள்பவனே,
  • ஆடற் றோகைக்கு இனியோனே
    நடனமாடும் மயிலுக்கு இன்பம் அளிப்பவனே,
  • ஆனைக் காவிற் பெருமாளே.
    திருவானைக்கா தலத்தின் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits