திருப்புகழ் 1327 சைவ முதல் (மதுரை)

தய்யதனத் தனதானா தனனதனத் ...... தனதானா
சைவமுதற்  குருவாயே  சமணர்களைத்  ......  தெறுவோனே 
பொய்யர்உளத்  தணுகானே  புனிதவருட்  ......  புரிவாயே 
கையின்மிசைக்  கதிர்வேலா  கடிகமழற்  ......  புதநீபா 
தெய்வசற்  குருநாதா  திருமதுரைப்  ......  பெருமாளே. 
  • சைவ முதல் குருவாயே சமணர்களைத் தெறுவோனே
    சைவ சமயத்தின் முதலான குருவாக (திருஞானசம்பந்தராக) வந்து, சமணர்களை முறியடித்தவனே,
  • பொய்யர் உ(ள்)ளத்து அணுகானே புனித அருள் புரிவாயே
    பொய்யர்களின் மனத்தில் இருக்காதவனே, உன் திருவருளைத் தந்து அருளுவாயாக.
  • கையின் மிசைக் கதிர் வேலா கடி கமழ் அற்புத நீபா
    உனது திருக் கரத்தில் ஒளி வீசும் வேலை ஏந்தியவனே, நறு மணம் வீசும் அற்புதமான கடப்ப மாலையைத் தரித்தவனே,
  • தெய்வ சற் குரு நாதா திருமதுரைப் பெருமாளே.
    இறைவனாகிய சிவ பெருமானுக்குச் சிறந்த குருவான தலைவனே, அழகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com