திருப்புகழ் · 521புமி அதனில் (கயிலைமலை)

bumiadhanil

தனதனனத் ...... தனதான
தனதனனத் ...... தனதான
புமியதனிற் ......ப்ரபுவான
புகலியில்வித் ...... தகர்போல
அமிர்தகவித் ...... தொடைபாட
அடிமைதனக் ...... கருள்வாயே
சமரிலெதிர்த் ...... தசுர்மாளத்
தனியயில்விட் ...... டருள்வோனே
நமசிவயப் ...... பொருளானே
ரசதகிரிப் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • புமியதனிற் ப்ரபுவான
    இந்தப் பூமண்டலத்தின் தனிப் பெரும் தலைவரும்,
  • புகலியில்* வித்தகர்போல
    சீர்காழிப்பதியில் அவதரித்தவருமான திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல
  • அமிர்தகவித் தொடைபாட
    இறப்பை நீக்கி மரணமிலா வாழ்வைத் தரவல்ல தேவாரப் பாடல்களைப் போன்று பாடுதற்கு
  • அடிமைதனக்கு அருள்வாயே
    இந்த அடிமைக்கும் திருவருள் புரிவாயாக.
  • சமரிலெதிர்த்த சுர் மாள
    போரில் எதிர்த்து வந்த சூரன் மாண்டொழிய
  • தனியயில்விட்டு அருள்வோனே
    ஒப்பற்ற வேலாயுதத்தை ஏவி அருளியவனே,
  • நமசிவயப் பொருளானே
    நமசிவய என்ற ஐந்தெழுத்தின் தத்துவமாகியவனே,
  • ரசதகிரிப் பெருமாளே.
    வெள்ளியங்கிரியில் (கயிலைமலை) உள்ள பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout